திங்கள், ஜனவரி 05, 2009

வெளிநாடு வாழ் இந்திய(பெண் தேடும்) மாப்பிளையின் காதல் கவிதை
" நான் ஒரு NRI
நீ காட்டு என்னிடம் அக்கறை
நான் உனக்கு தருவேன் GREEN CARD
நீ எனக்கு காட்டாதே RED CARD
நாளை நான் கட்டுவேன் மஞ்சக்கயிறு
நாலு வருஷம் கழிச்சு அது உனக்கு (எமனோட) பாசக்கயிறு
என் இதயத்தில் நீ ஒரு வைரசு
பின்னாளில் நான் கொடுப்பேன் டைவர்சு
நயாகராவுக்கு போவோம் ஹனிமூனு
அதுவே நீ பாக்குற சனி மூனு"

ஞாயிறு, ஜனவரி 04, 2009

Bhai

முதல் physiologu கோர்ஸ் .வாத்தியார் டாடி .நன்கு படித்து எழுதியும் 'D' தந்தார் .அடுத்த கொர்சில் முதல் & கடைசி பக்கங்களை தவிர நடுவில் சமீபத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பற்றி 10 பக்கங்களுக்கு புகுந்து விளையாடி இருந்தேன் . 'B' தந்தார் .மூன்றவது கொர்சில் இந்தியா- ஆஸ்திரேலியா மேட்ச்.வாவ் ! மீண்டும் 'ப' .இருதியில் தெரிந்தது 'பெண்' வேடம் போட்டிருந்தால் எழுதாமலே 'A' வாங்கிஎருக்கலாம் என்று.
நாம் கல்லூரியில் படிக்கையில் பல methods of castration படித்துள்ளோம், ஆனால் பொள்ளாச்சியில் பயிற்சி மருத்துவர்களாக இருந்தபோது நாய்களுக்கு "காக்காய் throw method of castration" என்ற புதிய முறையை கற்றுக்கொண்டோம். அதில் நாய் கொண்டு வரும் owner வந்தவுடன் ஒரு பனாமா பிளேடு மற்றும் நூல்கண்டு ஒன்று வாங்கி வருமாறு அறிவுருத்தப்படுவார் , நாயுடைய வாய் மற்றும் பின் கால்கள் கட்டப்படும். பின்னர் எந்த வித மயக்க மருந்துகளும் இல்லாமல் தோல் வெட்டப்பட்டு, கொண்டு வந்த நூல் மூலம், ரத்த நாளங்கள் ligate செய்யப்படும், பின்னர் testicles இரண்டும் வெட்டி எடுத்து காக்கைக்கு போடப்படும். வெட்டுக்காயம் nebasulf பவுடர் மூலம் dress செய்யப்படும்.( மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள் படிக்காமல் இருந்தால் நன்று.... மருத்துவமனை பணியாளர்கள் கூறுவது என்னவென்றால், மயக்க மருந்துகள் supply செய்யப்படுவதில்லை, அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என்றால் பொது மக்கள் மேலதிகாரிகளிடம் புகார் செய்து மெமோ வாங்கி கொடுத்து விடுவார்கள்). இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், hospital attender ஆறுச்சாமி புதிய பனாமா பிளேடை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்று வெளியில் வரும்போது பிளேடு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்(அவருடைய பழைய பிளேடு வெளியே வந்து புது பிளேடு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும்,பனாமா பிளேடு தான் வேண்டும் என்பதில் மிக பிடிவாதமாக rules follow செய்வார்கள் ), ஒரு முறை ஒரு testicle எடுக்கப்பட்ட நிலையில் ஒரு நாய் அறுத்துக்கொண்டு தப்பி விட்டது, அதற்கு பிறகு அந்த நாய் எங்கு போனது என்றே owner ஆல் கண்டுபிடிக்க முடிய வில்லை.

சனி, ஜனவரி 03, 2009

"கரையானின் காதல் கடிதங்கள்-1"

இமயமலை இடிந்தாலும்

பரங்கிமலை பறந்தாலும்

வங்கக்கடல் வற்றினாலும்

கூவம் குடிநீரானாலும்

நீ என்னை மறந்தாலும்

நான் உன்னை மறவேன்.........

வெள்ளி, ஜனவரி 02, 2009

ஒரு காலத்துல(நாம் படிக்கு காலத்தில்) pfizer ராதாகிருஷ்ணன் ன்னு ஒருத்தர் இருப்பார், அவருடைய பெயரோடு கம்பெனி பெயர் ஒட்டிக்கொண்டு இருக்கும், ஆனால் இப்போ சங்கரோட pfizer அப்படின்னு சொல்ற அளவுக்கு எடுத்து வந்துட்டாரு நம்ப நண்பர். இவரு "மன்னார்குடி மாப்பிள்ளைஸ் சங்கம்" உறுப்பினர்(மாற்ற உறுப்பினர் வேறு யாரும் இல்லை த கிரேட் கரையான்). அரசு வேலையுலதான் ஓய்வு அடையும் வரை ஒரே வேலையுல இருப்பாங்க, ஆனால் இவர் தனியார் வேலையுல ஒரே கம்பென்யுல கூட பல வருடம் இருந்து சாதனை புரிஞ்சுட்டாறு. இவர் ஒரு கராத்தே கிளி( கராத்தே புலி கேள்வி பட்டு இருக்கோம்,அது என்ன கிளி enru நீங்கள் ketpathu kaathil vizhukirathu, புலி சண்டை போடும், கிளி வெறும் saththam மட்டும் போடும்).

pharmacology lab days

நான்காவது ஆண்டில் pharmacology லேபில் செய்த ஒரு எக்ஸ்பெர்மேன்ட் ஞாயபகத்திற்கு வருகிறது. அந்த வாத்தியார் பேர் என்னகு ஞாயபகம் இல்லை, ஆனால் A batchil நமது நண்பர்கள் பண்ண சேட்டை ஞயாபகம் உள்ளது. எலிகளில் மருந்துகளின் LD50 என்னவென்று sodhipadharkaga எக்ஸ்பெரிமென்ட் செய்தோம்; ஆதலால் சில எலிகள் செத்துவிட்டன. நமது மக்கள் சில செத்த எலிகளை வாத்தியாரின் பையில் போட்டுவிட்டார்கள். அவர் கண்டுபிடித்துவிட்டு எல்லோரயும் திட்டினார், ஆனால் நமது மக்கள் சிரித்து கொண்டு அவரை சீரியஸ் ஆக எடுக்கவில்லை. இந்த வாத்தியார் லைட் yellow கலர் pant போட்டு ஆரஞ்சு stripe underwear போடுவ்வார், அதை நோட்டீஸ் பண்ணாமல் பாடத்தில் கவனம் வைப்பது கஷ்டம், கிளாஸ் எடுக்கும் போது எல்லோரும் பார்த்து சிரிப்பது சகஜம். அவர் பேர் யாருக்காவது ஞாயபகம் வந்தால் கமெண்ட் SEYYAVUM.


Gujili

வியாழன், ஜனவரி 01, 2009

internship time ல பொள்ளாச்சியில் கருப்ஸ் மற்றும் குமரேசனுக்கு "மாப்பிள்ளை market value" ரொம்ப நல்லாவே இருந்தது, ரெண்டு பேரும் கவுண்டர்கள் என்பதால். எனக்கு அப்படி எதுவும் இருந்ததில்லை(மற்ற நேரத்திலும் கூடத்தான்) , வெளியில் கேஸ் பார்க்க செல்லும்போது கவுண்டர் வீடு என்றால் கவனிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அவர்கள் இருவருக்கும். அப்படி ஒரு இடத்தில் கருப்ஸ் கேஸ் பாக்க சென்ற இடத்தில், கருப்ப்ஸ் பற்றி அவர்கள் விசாரிக்க, ரொம்ப நெருங்கி வந்து விட்டார்கள். முதல் நாள் டிபன் காப்பி என்றிருந்த கவனிப்பு மூன்றாம் நாள் மத்திய உணவு வரை வளந்துவிட்டது. கருப்ப்ஸ் இன் நடை உடை பாவனை மற்றும் ஸ்டைல் அவர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. கருப்ப்ஸ் எங்கள் இருவரிடமும் ரொம்பவே பந்தா விட ஆரம்பித்து விட்டான்," என்னமா கவனிக்குராங்கடா, சப்பாத்தி வேணுமா,குருமா வேணுமா, கோழி ஆடெல்லாம் சாப்புடுவீங்களா ன்னு பயங்கர கவனிப்புதான் போ"என என்னுடைய வயித்தெரிச்சலை ரொம்பவே அதிகரித்தான். எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறிய காட்சி ஓடிக்கொண்டே இருந்தது"மஞ்சள் தண்ணி தெளித்து மாலையிட்டு பலிக்கு தயார் படுத்தப்படும் ஆட்டு கிடா" ஒன்று மனக்கண்ணில் அடிக்கடி வந்து சென்றது. மூன்று நாள் முடிந்தது, நான்காவது நாள் கருப்ப்ஸ் follow-up treatment க்கு செல்ல வில்லை,என்னைப்போக சொன்னான், நான் "என்ன கருப்ப்ஸ் அவுங்க வீட்டுல இருந்த கோழி,கிடா எல்லாம் காலி ஆயிடுச்சா என்ன போக சொல்றே" என்று சந்தேகமாக விசாரித்தேன். "நல்ல வேலைடா பாழும் கிணத்துல தள்ளப்பார்தானுங்க, தப்பிச்சுட்டேன்" என sambanthame இல்லாமல் எதோ கூறினான். நான் அவனுடன் சென்ற attender இடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன்," சார் அந்த வீட்டுப்பொண்ணு சார விட எல்லாமே கொஞ்சம் குறைவுதான், அவர விட அழகுல, தோல் வெளுப்புல, உயரத்துல etc etc என அடுக்கிக்கொண்டே சென்றான், வயசுலயும் உருவத்துலயும் மட்டும்தான் அவரைவிட ரொம்ப அதிகம்,நேத்துதான் சாருக்கு அந்த பொண்ண காட்டுனாங்க ", எனக்கு ஒரு சின்ன ஆவல் நாமும் அந்த பெண் எப்படித்தான் இருக்கிறாள் என பார்த்து விடுவது என்று(ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு இல்லையா). பார்த்தேன் "stunningly beautiful" என்பதற்கு அர்த்தம் அன்றுதான் எனக்கு தெரிந்தது.